கிரிக்கெட் ரசிகரை கோபமாக நாட்டை விட்டு வெளியேறச் சொன்னது ஏன்? விராட் கோஹ்லி கொடுத்த விளக்கம்

Report Print Santhan in கிரிக்கெட்

கிரிக்கெட் ரசிகர் ஒருவரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு சர்ச்சைக்குரிய கருத்து கூறிய இந்திய அணியின் தலைவர் கோஹ்லி விளக்கமளித்துள்ளார்.

இந்திய அணியின் தலைவரான கோஹ்லி, ரசிகர் ஒருவரிடம் தன்னுடைய பேட்டிங் பிடிக்கவில்லை என்றால் நாட்டைவிட்டு வெளியேறும் படி கடும் கோபமாக கூறியிருந்தார்.

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்த, இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமின்றி இணையவாசிகள் பலரும் கோஹ்லியின் வறுத்தெடுத்தனர்.

இந்நிலையில் கோஹ்லி தன்னுடைய கருத்துக்கு டுவிட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில், ரசிகரே நீங்கள் கிண்டல் செய்வது என்னை இல்லை என்று நினைக்கிறேன். கிண்டல்களை ஏற்க தான் தயாராக இருப்பதாகவும், ரசிகர் குறிப்பிட்டதற்கு தான் பதிலுக்கு விமர்சித்ததாகவும் மற்றபடி வேறு எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.

மேலும் அனைவருக்கும் பேச்சு சுதந்திரம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்திய கோஹ்லி, அதை வெளிச்சமிட்டு காட்டுங்கள், அனைவரும் அமைதியாகவும், நிம்மதியாகவும் இருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers