கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்த இந்திய இளம் வீரர்: வித்தியாசமாக பந்து வீசிய வைரல் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரில் இளம் வீரர் ஒருவர் பந்து வீசிய வீடியோ தற்போது கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான 23 வயதுக்குட்பட்டோருக்கான சி.கே.நாயுடு கிண்ண நான்கு நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடர் தற்போது மாநிலங்களில் நடைபெற்று வருகிறது.

இதில் கொல்கத்தாவில் நடைபெற்ற குழு – 1-க்கான போட்டியில் பெங்கால் மற்றும் உத்திரப்பிரதேச அணிகள் மோதின.

அப்போது உத்திர பிரதேச மாநில அணியைச் சேர்ந்த 19 வயதுடைய இடதுகை சுழற்பந்துவீச்சாளர் சிவா சிங், வித்தியாமான முறையில் பந்து வீசினார்.

அதாவது அவர் 360 டிகிரி அளவிற்கு சுற்றி வந்து பந்து வீசினார். இதைக் கண்ட நடுவர் முறையற்ற பந்து(டெட் பால்) என்று கூறினார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சிவா சிங் இது எப்படி டெட் பால் ஆகும், நான் ஏற்கனவே இது போன்று பந்து வீசியுள்ளேன் என்று கேள்வி எழுப்பியதால், தற்போது இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சிவா சிங் கூறுகையில், நான் ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் வித்தியாசமான பாணியில் பந்துவீசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இந்தப் போட்டியிலும் இதைச் செய்யலாம் என நினைத்தேன்.

ஏனெனில் பெங்கால் வீரர்கள் இப்போட்டியில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்தனர். அவர்களை வீழ்த்த வேண்டும் என்று அப்படி வீசினேன். ஆனால், நடுவர் அதை டெட் போல் என்று அறிவித்துவிட்டனர். அதனால் அவரிடம், இது குறித்துக் கேட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers