பாகிஸ்தானை பந்தாடிய இந்திய மகளிர் அணி

Report Print Kabilan in கிரிக்கெட்

மகளிர் டி20 உலகக் கிண்ண தொடரில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வீழ்த்தியது.

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கிண்ண தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி பீல்டிங்கை தெரிவு செய்தது.

அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்கத்தில் விக்கெட்டுகள் சரிந்தாலும், பிஸ்மா மாரூப்(53) மற்றும் நிதா தர்(52) ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதன்மூலம் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 133 ஓட்டங்கள் எனும் ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டியது.

இந்திய அணித்தரப்பில் ஹேமலதா, பூனம் யாதவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் மந்தனா 26 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், மிதாலி ராஜ் 47 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் குவித்தார்.

இதனால் இந்திய அணி 19 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 14 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். ஏற்கனவே முதல் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியிருந்ததால், இந்திய அணிக்கு இது இரண்டாவது வெற்றியாகும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்