எனது வெற்றிக்கான ரகசியம் இதுதான்: மனம் திறந்த ரோஹித் ஷர்மா

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மா தனது வெற்றியின் ரகசியம் குறித்து மனம் திறந்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டி20 தொடரை, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றது. கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 182 ஓட்டங்கள் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.

போட்டி முடிந்ததும் இந்திய அணித்தலைவர் ரோஹித் ஷர்மா பேட்டியளித்தார். அதில் அவர் கூறுகையில், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் குறித்து இப்போதே சிந்திக்கவில்லை. அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது என்றே கருதுகிறேன்.

முதலில் அங்கு டி20 தொடரில் விளையாடுகிறோம். அதன் பின்னர் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பயிற்சி ஆட்டங்களிலும் கலந்து கொள்கிறோம். டி20 தொடருக்கு பிறகு டெஸ்ட் தொடர் குறித்து சிந்திப்பதற்கு நமக்கு போதுமான நேரம் இருக்கும்.

நான் நிகழ்காலத்தில் இருக்கவே முயற்சி செய்கிறேன். அது தான் எனக்கு சரிவரும் என தெரிவித்தார். மேலும் தனது வெற்றியின் ரகசியம் குறித்து அவர் கூறுகையில்,

‘ஒவ்வொரு ஆட்டமும் புதிய ஆட்டம்தான். ஒவ்வொரு முறையும் மைதானத்துக்குள் செல்லும்போது, என்னுடைய நோக்கங்களை எளிதானதாக வைத்துக் கொள்வேன். இந்த ஆட்டம் எளிமையானது. அதனால் அதை எளிய முறையில் வைத்திருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers