கோஹ்லி படையை சமாளிக்க இந்திய வீரரின் உதவியை நாடும் அவுஸ்திரேலியா: யார் அந்த வீரர்?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிக்க இந்திய வீரர் ஒருவரின் உதவியை நாட அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணி இந்த மாத இறுதியில் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபகாலமாக அவுஸ்திரேலியா அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதால், அதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வீரர்கள் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஒரு பகுதியாக இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க இந்திய வீரர் ஒருவரின் உதவியை நாடவும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ரஞ்சி தொடர்களில் விளையாடியுள்ள சாய் சாஹு என்னும் பந்துவீச்சாளரை வலை பயிற்சியின் போது பயன்படுத்தி கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சாய் சாஹு கூறுகையில், அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டால், நான் அந்த நேரத்தில் ப்ரியாக இருந்தால் நிச்சயம் அவர்களுக்கு உதவி செய்ய தயாராகவே உள்ளேன்.

விளையாட்டிற்கு வயது என்பது தடை கிடையாது திறமை தான் முக்கியம். என்னை முன்னேற்றி கொண்டு எனது கிரிக்கெட் பயணத்தை சிறப்பாக்க முயற்சிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers