இறுதிகட்டத்தில் இருக்கும் டோனியின் பெரிய ஆசையே இது தான்! அவரது நண்பர் சொன்ன ரகசிய தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் வெற்றிக் கேப்டன் என்றழைக்கப்படும் டோனியின் ஆசை, அடுத்தாண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடர் தான் என்று அவரது நெருங்கிய நண்பர் ஒருவர் கூறியுள்ளார்.

டோனி கிட்டத்தட்ட தன் சர்வதேச கிரிக்கெட் வாழ்வின் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளார் என்றே கூறலாம். அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் அதிரடியாக நீக்கப்பட்ட டோனிக்கு பதிலாக, இளம் வீரர் ரிஷப் பாண்ட் சேர்க்கப்பட்டார்.

டி20 போட்டியிலிருந்து டோனி நீக்கப்பட்டுள்ளதால், விரைவில் அவர் தன் ஓய்வை அறிவித்துவிடுவார் என்று ரசிகர்கள் பலரும் கவலையில் உள்ளனர்.

ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி நிச்சயமாக டோனி இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடரில் விளையாடுவார் என்று கூறி வருகிறார்.

இந்நிலையில் டோனியின் நெருங்கிய நண்பரும் விளம்பர நிறுவனமான ரிதி ஸ்போர்ட்ஸ்-இன் இயக்குனருமான அருண் பாண்டே ஒரு விஷயத்தை கூறியுள்ளார்.

அதில், ஒருநாள் போட்டிகளில் தன் கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது இருந்து டோனியின் ஒரே கனவு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆடுவது தான். அதில் அணியின் ஆலோசகராகவும் இருப்பார் எனவும் கூறியுள்ளார்.

அவர் கோஹ்லிக்கு நேரம் கொடுத்து கேப்டன் பதவியில் வளர இடம் அளித்தார். அவரது எண்ணத்தில் இப்போதும் எந்த மாற்றமும் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...