அவுஸ்திரேலிய வீரரின் ஸ்டெம்பை தெறிக்கவிட்ட ஜஸ்பிரிட் பும்ரா: மிரண்டு நின்ற வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய லெவன் அணிக்கெதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய வீரர் பும்ரா தன்னுடைய துல்லியமான யார்க்கரால், ஸ்டெம்பை தெறிக்கவிட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா-அவுஸ்திரேலிய லெவன் அணிகளுக்கிடையேயான 4 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் சிட்னியில் நடைபெற்றது.

இப்போட்டியில் முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 358 ஓட்டங்களை எடுத்தது.

அடுத்து அதன் பின் ஆடிய அவுஸ்திரேலிய லெவன் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து 544 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

அதன் பின் 186 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் விளையாடிய இந்திய அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் எடுத்தது.

இதனால் ஆட்டம் டிராவானது.

இப்போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா, அவுஸ்திரேலிய வீரர் கோலிமெனை தன்னுடைய துல்லியமான யார்க்கர் பந்து வீச்சின் மூலம் ஸ்டெம்பை தெறிக்கவிட்டார். இதைக் கண்ட கோலிமேன் ஒன்று செய்யமுடியாமல் மிரண்டு போய் பவுலியன் சென்றார்.

இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers