டோனியைப் போன்று துல்லியமாக ஹெலிகாப்டர் ஷாட் அடித்த ரஷீத் கான்: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

துபாயில் நடைபெற்ற டி10 லீக் போட்டியில், ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத்கான், ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அணி வீரர்களை மிரண்டு போக வைத்தார்.

ஆப்கானிஸ்தான் அணி வீரரான ரஷீத்கான் குறைந்த வயதில் பல சாதனைகளை படைத்து வருகிறார். கத்துக்குட்டி அணியில் இருந்தாலும், தன்னுடைய திறமையினால் இப்போது புகழின் உச்சிக்கு சென்றுள்ளார்.

உலகில் நடக்கும் குறைந்த ஓவர் லீக் போட்டிகளில் ரசீத்கானை எடுக்க பல அணிகள் போட்டு போடும்.

அதுமட்டுமின்றி மிகக்குறைந்த ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற சதனையும் படைத்துள்ளார்.

இந்நிலையில் ரஷீத்கான் தற்போது துபாயில் நடைபெற்று வரும், டி10 லீக் போட்டியில் மராதா அரேபியன்ச் அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த போட்டியின் போது இவர் அடித்த ஒரு சிக்சர் அப்படியே இந்திய வீரர் டோனி அடிக்கும் ஹெலிகாப்டர் ஷாட் போன்றே இருந்தது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, ரஷீத்கான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஹெலிகாப்டர் ஷாட் கண்டுபிடிப்பாளரே சகோதரர் டோனி என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்