அவுஸ்திரேலிய அணியில் விளையாடும் 6 வயது சிறுவன்: விராட் கோஹ்லியை வீழ்த்துவேன் என சவால்!

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்தியா- அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்திரேலிய அணியில் 6 வயது சிறுவன் இடம்பிடித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட், மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி 6-ம் திகதி அடிலெய்டில் தொடங்குகிறது.

இந்நிலையில், அவுஸ்திரேலிய டெஸ்ட் அணி வீரர்கள் வலைப்பயிற்சி செய்தபோது, அவர்களுடன் 6 வயது சிறுவனும் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

டிசம்பர் 26-ம் திகதியான ‘பாக்சிங் டே’ அன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியில் அவர் இடம்பெறுவார் என்று கூறப்பட்டது.

ஆர்ச்சி ஷில்லர் என்ற 6 வயது சிறுவன் இதய வால்வு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கிரிக்கெட் மீது மிகப்பெரிய ஆர்வம் உள்ளது. என்றாவது ஒருநாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஆக வேண்டும் என்று அவர் விரும்பியுள்ளார்.

இந்த தகவலை அறிந்த அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், அவரை வீடியோ கால் மூலம் தொடர்புகொண்டு அணியில் சேர்ந்துகொள்ளுமாறு கூறியுள்ளார்.

தான் ஒரு லெக் ஸ்பின்னர் என்று கூறும் ஆர்ச்சி ஷில்லர், விராட் கோஹ்லியை வீழ்த்துவேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்