பந்துகளை சிதறடிக்கும் விராட் கோஹ்லி! வைரலாகும் பயிற்சி வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நாளை அடிலெய்டில் தொடங்க உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது.

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி வலைப்பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில் வீசப்படும் பந்துகளை கோஹ்லி நாலாபுறமும் சிதறடிக்கிறார். இந்த வீடியோவை தற்பொது பலரும் குறிப்பிட்டு கோஹ்லியின் பேட்டிங் திறமையை வெகுவாக பாரட்டி வருகின்றனர்.

குறிப்பாக அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட், சேம் பில்லிங்ஸ் ஆகிய கிரிக்கெட் வீரர்களும் கோஹ்லியின் பேட்டிங்கை பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பைசல் இக்பால் கோஹ்லியின் இந்த வீடியோவை குறிப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘கோஹ்லி இந்த கிரகத்தில் இருந்து வரவில்லை என்பதில் சந்தேகமில்லை. ஒவ்வொரு நாளும் தன்னை பேட்டிங்கில் மெருகேற்றிக் கொண்டிருக்கிறார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers