அவுஸ்திரேலிய அணிக்கு திருப்பிக் கொடுத்த கோஹ்லி படை! ஸ்டம்ப்பை தெறிக்கவிட்டு வெளியேறிய பின்ச் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அடிலெய்டில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அந்தணி முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.

இதில் முதலில் விளையாடிய இந்திய அணி அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 250 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் புஜாரா மட்டும் 123 ஓட்டங்கள் குவித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார்.

அவுஸ்திரேலிய அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் கோஸ் ஹசல்வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து முதல் இன்னிங்ஸை துவங்கிய அவுஸ்திரேலியா அணியை இந்திய பந்து வீச்சாளர்கள் கதிகலங்க வைத்தனர்.

குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த்ஷர்மா அற்புதமாக பந்து வீசினார். இதனால் அவுஸ்திரேலியா அணிக்கு அடுத்தடுத்து விக்கட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன.

இன்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலியா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 191 ஓட்டங்கள் எடுத்து 59 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் ஆடி வருகிறது.

அவுஸ்திரேலிய அணியில் டிரவிஸ் ஹெட் அரைசதம் அடித்து 61 ஓட்டங்கள் எடுத்து களத்தில் உள்ளார். இந்திய அணி சார்பில் இஷாந்த் ஷர்மா, ஜாஸ்பிரிட் பும்ரா 2 விக்கெட்டுகளும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதில் அவுஸ்திரேலிய அணியின் பின்சை ஸ்டம்பை தெறிக்கவிட்ட வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers