பாகிஸ்தானை வீழ்த்தியவுடன் யாரையும் மதிக்காமல் சென்ற வில்லியம்ஸ்! கடும் விமர்சனத்திற்குள்ளாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி கைப்பற்றிய நிலையில், பரிசளிப்பு விழாவில் வில்லியம்ஸ் நடந்து கொண்ட விதம் கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

நியூசிலாந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று வித போட்டிகளில் விளையாடியது.

இதில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி ஒயிட்வாஷ் செய்தது. அதன் பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் 1-1 என்று சமநிலை ஆனது.

இதையடுத்து நடந்த மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-1 என்று நியூசிலாந்து அணி வென்றது.

இதற்கான பர்சளிப்பு விழாவின் போது கோப்பையை பெறுவதற்காக நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் அழைக்கப்பட்டார்.

கோப்பையை வழங்கும் விளம்பரதாரர்களின் பெயர்களை படித்தார். விளம்பரதார் கோப்பையை கொடுக்கும் முன்பே வில்லியம்சன் கோப்பையை தானாக எடுத்துக் கொண்டே, கோப்பையுடன் போட்டோவுக்கு போஸ் கொடுக்க சென்றார்.

அப்போது நியூசிலாந்து வீரர் கையில் வைத்திருந்த பரிசுத்தொகைக்கான விளம்பர அட்டையையும் அவரிடமிருந்து பிடுங்கி எறிந்தார்

இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகியதால், வில்லியம்ஸ் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்