கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்ட தமிழக வீரர்: இனி இடம் கிடைப்பது கஷ்டம்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரரான முரளி விஜய் ஜொலிக்காததால் அடுத்த போட்டியில் இடம்பெறுவது சந்தேகமாகியுள்ளது.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் மிகுந்த போராட்டத்துக்கு பின்னர் இடம்பிடித்த முரளி விஜய், வாய்ப்பை சரியான பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இரண்டு இன்னிங்ஸ்களிலும் 11, 18 ஓட்டங்களே எடுத்துள்ளார், இரண்டு முறையும் ஸ்டார்க் பந்தில் ஆஃப்-சைட் சென்ற பந்தில் எட்ஜ் ஆகி கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார்.

ப்ரித்வி ஷா காயமடைந்த காரத்திணாலேயே முரளி விஜய்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, தற்போது அவரது காயம் குணமடைந்து வருவதால் சரியாக ஓட்டங்கள் குவிக்காத நிலையிலும் இரண்டாவது டெஸ்ட்டில் வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்