பரபரப்பில் இந்தியா-அவுஸ்திரேலியா முதல் டெஸ்ட்! வெற்றியை தீர்மானிக்க காத்திருக்கும் இறுதி நாள்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஐந்தாம் நாள் ஆட்டம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், அஸ்வினை மட்டும் சமாளித்தால் போதும் என்று அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் லயன் கூறியுள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது.

இதில் அவுஸ்திரேலியா அணியின் வெற்றிக்கு 323 ஓட்டங்களை இந்திய அணி இல்லாக நிர்ணயித்துள்ளது.

நான்காவது நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது இன்னிங்ஸில், 4 விக்கெட்டுக்கு 104 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

இந்நிலையில் நாளைய கடைசி நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அணி வெற்றி பெற, இன்னும் 219 மட்டுமே தேவை, அதே சமயம் இந்திய அணியின் வெற்றிக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தினால் போதும் என்பதால் ஐந்தாம் நாள் ஆட்டம் பரபரப்பாக இருக்கும்.

இதற்கிடையில் அவுஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன், ஐந்தாவது நாளில், ஆடுகளம் துடுப்பாட்ட வீரர்களுக்கு சாதமாக இருக்கும். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு உதவாது.

அஷ்வினை சமாளித்தால் மட்டுமே போதுமானது. ஏற்கனவே துபாயில் இதே போல ஒரு சூழ்நிலை இருந்தது. அதை அவுஸ்திரேலியா வீரர்கள் எளிதாக சமாளித்தனர். அதே போல சொந்தமண்ணில் அவுஸ்திரேலியா வீரர்களால் நிச்சயம் சாதிக்க முடியும் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்