கோஹ்லிக்கு முன்பே நியாயமற்ற முறையில் அவுட் கொடுக்கப்பட்ட ஜாம்பவான் வீரர்: யார் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

பெர்த் டெஸ்டில் கோஹ்லிக்கு அவுட் கொடுக்கப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதேபோல் அவுஸ்திரேலியாவில் அவுட் கொடுக்கப்பட்டது முன்னாள் கேப்டன் கங்குலிக்கு தான்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆடி வருகிறது. இந்த டெஸ்டின் 3ஆம் நாள் ஆட்டத்தில் கோஹ்லிக்கு நியாயமற்ற முறையில் அவுட் கொடுக்கப்பட்டது.

அவர் அடித்த பந்தை 2வது ஸ்லிப்பில் நின்றிருந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப் பிடித்தார். பின்னர் நடுவரிடம் அவர் அவுட் கோர கோஹ்லி அவுட் என அவர் தெரிவித்தார்.

ஆனால், இந்த கேட்சில் கோஹ்லி சந்தேகம் எழவே 3வது நடுவருக்கு அப்பீல் செய்யப்பட்டது. அதில் பந்து தரையில் பட்ட பின்பு தான் ஹேண்ட்ஸ்கோம்பின் கைக்கு சென்றது தெரிய வந்தது.

எனினும், 3வது நடுவர் அவுட் கொடுக்க கோஹ்லி மிகுந்த ஏமாற்றத்துடன் வெளியேறினார். இதேபோல் ஒரு சம்பவம் கடந்த 2008ஆம் ஆண்டு சிட்னியில் நடந்தது.

அந்த டெஸ்டில், முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி அடித்த பந்தை ஸ்லிப்பில் மைக்கேல் கிளார்க் கேட்ச் பிடித்தார். ஆனால் பந்து தரையில் பட்டு தான் பிடிக்கப்பட்டது. கங்குலியும் அவுட் இல்லை என நின்று கொண்டிருந்தார்.

அப்போது, கள நடுவர் மார்க் பென்சன் அவுஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங்கிடம் இது சரியான கேட்ச்சா என கேட்டார். அதற்கு அவரும் ஆம் என்று கூற, நடுவர் அவுட் என கையை உயர்த்தினார்.

இதனால் மிகுந்த அதிருப்தியுடன் கங்குலி வெளியேறினார். கிரிக்கெட் வரலாற்றில் அணியின் கேப்டனிடம் கேட்டுவிட்டு நடுவர் அவுட் கொடுத்தது இந்த சம்பவம் தான் என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே, பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் பெரிய அடி வாங்கிய நிலையில், கோஹ்லியின் அவுட் விவகாரம் அவுஸ்திரேலிய அணியின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்