இந்திய அணியின் வெற்றியை தடுக்க வேண்டும் என கூறிய ஜான்சன்! சரியான பதிலடி கொடுத்த ஹர்பஜன் சிங்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணி தொடரைக் கைப்பற்ற விடாமல் இருக்க அவுஸ்திரேலியா அணி நான்காவது டெஸ்ட் போட்டியில் கடுமையாக போராட வேண்டும் எனவும், இந்திய அணியின் வெற்றி தடுக்கப்படும் என்று அவுஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்சல் ஜான்சன் கூறியுள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய அணி 2-1 என்று சமநிலையில் உள்ளது.

மூன்றாவது டெஸ்ட் போட்டி வெற்றிக்கு பின் இந்த முறை இந்திய அணி எப்படியும் தொடரைக் கைப்பற்றிவிடும் என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்கள் மனதில் வந்துள்ளது.

இந்நிலையில் அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து விச்சாளர் மிட்சல் ஜான்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்திய அணி துடுப்பாட்டம், பீல்டிங், பந்துவீச்சு ஆகிய துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளது.

2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிப்பது பாராட்டுக்குரிய விஷயம். ஆனால், இந்தியா இந்த டெஸ்ட் தொடரை வெல்வதைத் தடுக்க வேண்டும். அதற்கு அவுஸ்திரேலியா சிட்னியில் கடுமையாகப் போராட வேண்டும். புத்தாண்டைக் கொண்டாடுங்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.

அவர் இந்திய அணி தொடரை கைப்பற்றாது, அவுஸ்திரேலியா அணி தடுக்கும் என்பதை மறைமுகமாக ஜான்ஷன் கூறியிருப்பது போன்று உள்ளதால், இதற்கு இந்திய அணி வீரர் ஹர்பஜன் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், இந்தியாவில் இப்போதுள்ள வீரர்களின் அற்புதமான ஆவேசமான பந்துவீச்சில், சிட்னி டெஸ்ட் போட்டியிலும் அவுஸ்திரேலியா துடுப்பாட்ட வீரர்கள் திகைத்து நிற்கப்போகிறார்கள் ஜான்சன். .

புத்தாண்டைச் சந்தோஷமாகக் கொண்டாடுங்கள். டெஸ்ட் தொடரை 3-1 என்று வெல்லப் போகிறோம் பாருங்கள் என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்