சிட்னியிலும் கெத்து காட்டும் புஜாரா! அபார சதம் விளாசல்

Report Print Kabilan in கிரிக்கெட்

சிட்னியில் நடைபெற்று வரும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்டில், இந்திய வீரர் புஜாரா அபார சதம் விளாசியுள்ளார்.

இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வருகிறது.

தொடக்க வீரர் ராகுல் 9 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், மயங்க் அகர்வால் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார். அவருடன் கைகோர்த்த புஜாரா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், அவ்வப்போது பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பினார்.

சிறப்பாக ஆடிய மயங்க் அகர்வால் 77 ஓட்டங்களில் இருந்தபோது லயன் பந்துவீச்சில் அவுட் ஆனார். இந்நிலையில் அரைசதம் கடந்த புஜாரா வேகமாக ஓட்டங்களை சேர்த்தார். பின்னர் வந்த கோஹ்லி 23 ஓட்டங்களிலும், ரஹானே 18 ஓட்டங்களிலும் அவுட் ஆகினர்.

அடுத்த களமிறங்கிய விஹாரி, புஜாராவுடன் இணைந்து அதிரடி காட்டினார். சதத்தை நோக்கி முன்னேறிய புஜாரா இந்த தொடரில் தனது 3வது சதத்தை பதிவு செய்தார். ஏற்கனவே அடிலெய்டு, மெல்போர்னில் அவர் சதங்கள் விளாசியிருந்தார்.

AFP

இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 303 ஓட்டங்கள் எடுத்துள்ளது. புஜாரா 130 ஓட்டங்களுடனும், விஹாரி 39 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers