ஐசிசியில் இணைந்தது அமெரிக்க கிரிக்கெட் அணி

Report Print Gokulan Gokulan in கிரிக்கெட்

அமெரிக்க கிரிக்கெட் அணி ஐசிசியில் இணைந்துள்ளதாக, நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா கிரிக்கெட் அணியை ஐசிசி தனது 105வது உறுப்பினராக ஏற்றுக் கொண்டுள்ளது.

ஐசிசியின் அறிக்கையின்படி அமெரிக்கா 93வது அசோசியேட் அணிக்கான உறுப்பினர் கோரிக்கையை முன் வைத்துள்ளது.

இதனையடுத்து ஐசிசி நிர்வாகம் குழுவினரை கூட்டி அமெரிக்க அணியை 105வது உறுப்பினராக சேர்த்து கொண்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அமெரிக்க கிரிக்கெட் அணிக்கு ஐசிசியின் மேம்பாட்டு திட்டத்தின் அடிப்படையில் நிதி திரட்டவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்க கிரிக்கெட் அணிக்கான புதிய நிர்வாக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் ரிச்சர்ட்ஸன், அமெரிக்க சேர்மேனாக பராக் மரதேவையும் நிர்வாக குழுவையும் வரவேற்பதாக தெரிவித்தார். மேலம் அமெரிக்க கிரிகெட் அணி புதிய உச்சங்கள் அடைய வாழ்த்துகள் கூறினார்.

அமெரிக்க கிரிக்கெட் வாரிய தலைவரான பராக் கூறும்போது '' அமெரிக்காவில் கிரிக்கெட் சமூகத்தை வளர்ப்பதில் ஆர்வம் எங்களுக்குள் வந்துள்ளது. ஐசிசியின் அங்கீகாரத்துடன் இன்னும் சிறப்பாக செயல்படுவோம்" என்றார்.

மேலும் அமெரிக்க கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் ஐசிசியில் உள்ள மற்ற 104 உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்