டோனியின் பங்கு அணிக்கு மிகவும் அவசியம்: ரோஹித் ஷர்மா

Report Print Kabilan in கிரிக்கெட்

டோனியின் அறிவுரை கேப்டனுக்கு உதவியாக இருப்பதாக இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை வென்ற நிலையில், அடுத்ததாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி சிட்னியில் வரும் 12ஆம் திகதி நடக்க உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது அவர் அணிக்கு டோனியின் முக்கியத்துவம் குறித்து தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘டோனி பல போட்டிகளை சிறப்பாக முடித்துக் கொடுத்தவர். துடுப்பாட்டத்தில் அவரது பங்கு முக்கியமானது.

அவரது அமைதியும், அறிவுரையும் அணிக்கு தேவையான ஒன்று. அணியின் வெற்றிக்காக பல விடயங்களை அவர் தருகிறார். அவர் அணியில் இருப்பதே முக்கியமான விடயம்தான்.

அவர் இருந்தால் அவரைச் சுற்றி அமைதியும் இருக்கும். கேப்டனுக்கு உதவியாகவும் இருக்கிறார். பின் வரிசையில் விளையாடி ஆட்டத்தை முடித்து வைப்பது அணிக்கு தேவையான ஒன்று. அதை சிறப்பாக செய்பவர் டோனி’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய அணியுடன் இணைந்த டோனி, தவான், அம்பத்தி ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் சிட்னி மைதானத்தில் கடும் பயிற்சியில் ஈடுபட்டனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers