பெண்கள் குறித்து ஆபாச கருத்து.. பாண்டியா- ராகுலுக்கு 2 போட்டிகளில் விளையாட தடை?

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கே.எல்.ராகுல், ஹர்த்திக் பாண்டியா இருவரும் தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, பெண்கள் குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்ததற்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கே.எல்.ராகுல்-பாண்டியா இருவரும் பெண்கள் குறித்து ஆபாசமாக கருத்து தெரிவித்ததாக சர்ச்சை வெடித்தது.

அதனைத் தொடர்ந்து, பாண்டியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மன்னிப்பு கோரி பதிவிட்டிருந்தார். பின்னர் பி.சி.சி.ஐ நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் இதுதொடர்பாக 24 மணிநேரத்தில் விளக்கம் அளிக்குமாறு வீரர்கள் இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தெரிவித்தார்.

இந்நிலையில் பாண்டியா அளித்த விளக்கம் திருப்திகரமாக இல்லை என வினோத் ராய் தற்போது கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில்,

‘அவர்கள் இருவருக்கும் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்குமாறு பரிந்துரைத்துள்ளேன். நிர்வாகக் கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி அனுமதித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.

பாண்டியா-ராகுல் இருவரும் ஒருநாள் போட்டி தொடருக்காக அவுஸ்திரேலியா சென்றுள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியம் வினோத் ராயின் பரிந்துரையை ஏற்கும் பட்சத்தில் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்