நியூசிலாந்து அணியிடம் ருத்ரதாண்டவத்தை காட்டிய திசர பெரேரா! தரவரிசையில் அசுர முன்னேற்றம்

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் ருத்ரதாண்டம் ஆடிய இலங்கை வீரர் திசர பெரேரா, ஐ.சி.சியின் ஒருநாள் வீரர்களுக்கான தரவரிசையில் அசுர முன்னேற்றம் கண்டுள்ளார்.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி, அங்கு மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது.

இதில் நியூசிலாந்து 3-0 என்று தொடரைக் கைப்பற்றி வைட்வாஷ் செய்தது.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் பேரவை ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலை கடந்த 9-ஆம் திகதி வெளியிட்டது.

அதில், நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 57 பந்துகளில் சதம் கடந்து, மொத்தம் 13 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் என மொத்தம் 140 ஓட்டங்களையும், மூன்றாவது ஒருநாள் போட்டியில் 63 பந்துகளில் 80 ஒட்டங்களையும் குவித்து, ஒருநாள் அரங்கில் தனது சிறந்த துடுப்பாட்ட திறமையை வெளிப்படுத்தியிருந்த இலங்கை அணியின் ஆல்ரவுண்டரான திசர பெரேரா, நீண்ட இடைவெளியின் பிறகு ஐ.சி.சியின் ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளார்.

ஐ.சி.சி வெளியிட்ட ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில், திசர பெரேரா 22 இடங்கள் முன்னேறி 65-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இந்த தொடரில் 240 ஓட்டங்களை ஒட்டுமொத்தமாகக் குவித்த அவர், ஐ.சி.சியின் துடுப்பாட்ட வீரர்களுக்கான புள்ளிகள் பட்டியலில் 509 புள்ளிகளைப் பெற்று தனது சிறந்த துடுப்பாட்ட முன்னேற்றத்தை கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்