அவுஸ்திரேலியாவை புரட்டியெடுக்க கடுமையான பயிற்சியில் இறங்கிய கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, இரண்டாவது ஒருநாள் போட்டிக்காக கடுமையான வலைப்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்தப் போட்டியில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 3 ஓட்டங்களில் அவுட் ஆனார். இதனால் அடிலெய்டு போட்டியில் வெற்றி பெற கடுமையான வலைப்பயிற்சியை அவர் மேற்கொண்டுள்ளார்.

இதுதொடர்பான வீடியோ ஒன்றை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் விராட் கோஹ்லி அபாரமாக எதிர்கொள்கிறார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்