இந்திய அணி வீரரான இவரை போன்று நான் யாரையும் பார்த்தது இல்லை! புகழ்ந்து தள்ளும் குமார் சங்ககாரா

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக்கை போன்று ஒரு சுயநலமில்லா துடுப்பாட்ட வீரரை நான் பார்த்ததே இல்லை என்று இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் குமார் சங்ககாரா கூறியுள்ளார்.

இந்திய அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கி சிறப்பாக விளையாடிய வீரர்களின் வரிசையில் கங்குலி, சச்சினைத் தொடர்ந்து சேவாக்கின் பெயர் நிச்சயம் இருக்கும்.

அந்த அளவிற்கு களத்தில் இறங்கியவுடன் முதல் பந்திலே சிக்ஸர் அடித்து எதிரணியை மிரட்டும் திறமை கொண்டவர்.

இவரின் அதிரடியைக் கண்டு பயப்படாத அணிகளே இல்லை என்று சொல்லலா. அந்தளவிற்கு அபாயகரமான வீரர். துவக்கத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, மிடில் ஆர்டர் துடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்ததை குறைப்பார் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் சேவாக்கைப் பற்றி இலங்கை அணியின் முன்னாள் வீரர் சங்ககாரா புகழ்ந்து தள்ளியுள்ளார். அவர் கூறுகையில், முதன்முதலில் சேவாக்கின் துடுப்பாட்டத்தை பார்த்தபோது அதிகளவில் ரசித்து பார்த்தேன்.

அவரது ஆட்டம் என்னை ஈர்த்தது. அவரது துடுப்பாட்டம் திறமையால் மட்டுமல்ல, விரைவில் ஓட்டங்களை குவிக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் என்னை மிகவும் கவர்ந்தது.

இதுபோன்ற எண்ணம் கொண்ட வீரர்களை கண்டறிவது மிகவும் கடினம். இன்னிங்ஸின் முதல் பந்திலிருந்து அடித்து ஆட தொடங்கி பந்து வீச்சாளர்கள் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடுவார்.

அதேபோல அவரது சொந்த துடுப்பாட்ட சராசரியை பற்றியோ சாதனைகளை பற்றியோ யோசிக்கவே மாட்டார்.

அவரது எண்ணம் முழுவதுமே, அணிக்காக விரைவில் ஓட்டங்களை குவித்து வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும் என்பதுதான் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்