டோனியின் சாதனையை 4 ஆண்டுகளில் முறியடித்த பாகிஸ்தான் வீரர்! தென் ஆப்பிரிக்கா போட்டியில் அசத்தல்

Report Print Santhan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணியின் தலைவரும், விக்கெட் கீப்பருமான சர்பராஸ் அகமது இந்திய அணியின் தலைவரான டோனியின் சாதனையை முறியடித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, அங்கு மூன்று வித போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது.

இந்த தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 3-0 என்று கைப்பற்றி சாதனை படைத்தது.

இந்நிலையில் கடந்த 11-ஆம் திகதி நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் தலைவரான சர்பராஸ் அகமது கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இப்போட்டியில் ஒரு அணித்தலைவராகவும், விக்கெட் கீப்பராகவும் சர்பராஸ் 10 கேட்சுகள் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் இந்திய அணியின் தலைவராகவும், விக்கெட் கீப்பராகவும் இருந்த டோனி கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மேல்பேர்னில் நடைபெற்ற அவுஸ்திரேலியா அணிக்கெதிரான போட்டியில் அணித்தலைவராகவும் விக்கெட் கீப்பராகவும் இருந்து 8 கேட்சுகளை பிடித்ததே சாதனையாக இருந்தது.

எனவே, குறித்த சாதனை 4 வருடங்களின் பின்னர் சர்பராஸ் அகமது முறியடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்