அசர வைக்கும் பீல்டிங்: கண் இமைக்கும் நேரத்தில் ரன்-அவுட் ஆக்கிய ஜடேஜா

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியின் போது, உஸ்மான் கவாஜாவை இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ரன்-அவுட் செய்து வெளியேற்றும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அணியானது அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்த முதல் ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இதனை தொடர்ந்து அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அவுஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 298 ரன்கள் குவிந்திருந்தது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் ஷான் மார்ஷ் அதிகபட்சமாக 131 ரன்களை குவிந்திருந்தனர். இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்டுகளையும், முகம்மது ஷமி 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

இந்த நிலையில் போட்டியின் இடையில் அவுஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவை இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா ரன்-அவுட் செய்து வெளியேற்றும் வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்