இந்திய அணிக்காக மீண்டும் களமிறங்கும் தமிழக வீரன்!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் இரண்டு அறிமுக வீரர்களான விஜய் சங்கர் மற்றும் ஷுப்மன் கில் ஆகியோர் அவுஸ்திரேலியா பயணிக்க உள்ளார்கள்.

இந்திய ஒருநாள் அணியில் இடம்பிடித்திருந்த லோகேஸ் ராகுல் மற்றும் ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அவர்கள் விசாரணைக்காக இந்தியாவிற்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களது இடத்தை நிரப்புவதற்காகவே தமிழ்நாட்டைச் சேர்ந்த 27 வயதான சகலதுறை வீரர் விஜய் சங்கர் மற்றும் பஞ்சாப்பைச் சேர்ந்த 19 வயதான இளம் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ஷுப்மன் கில் ஆகியோர் அவுஸ்திரேலியா பயணிக்க உள்ளார்கள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்