ஒரு ரன் கூட ஒழுங்கா ஓடத் தெரியாத டோனி! வெளியான வீடியோ: திட்டி தீர்க்கும் அவுஸ்திரேலிய ஊடகம்

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டோனி சிறப்பாக விளையாடிய போதும், அவர் ஒரு ரன் கூட எடுக்கத் தெரியாத வீரர் என்று அவுஸ்திரேலியா ஊடகங்கள் விமர்சித்து வருகின்றன.

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் டோனி சிறப்பாக விளையாடி தன் மீது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

ஒவ்வொரு முறையும் தன் மீது விமர்சனம் விழும் போது, தன்னுடைய பேட் மூலம் பதிலடி கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

இப்படி பழைய டோனியை மீண்டும் பார்க்க முடிந்தது என்று இந்திய ஊடகங்கள் பாராட்டி வரும் நிலையில், அவுஸ்திரேலிய ஊடகங்கள் டோனியை விமர்சித்து வருகின்றன.

அதாவது, இரண்டாவது ஒருநாள் போட்டியில் டோனி துடுப்பெடுத்தாடிய போது, 45-வது ஒவரின் கடைசி பந்தில் அவர் ஓட்டம் எடுக்க ஓடிய போது, கிரீஸில் வைக்காமல் திரும்பினார்.

ஆனால் அதனை போட்டி நடுவர் கவனிக்க தவறியதால் அவருக்கு ஓட்டம் வழங்கப்பட்டது. இதனால் ஒரு ரன்னை கூட முழுமையாக ஓடி எடுக்க முடியாதவர் டோனி என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

அதுமட்டுமின்றி இரண்டாவது ஒருநாள் போட்டியில் மிகுந்த உஷ்ணம் நிலவியதால், போட்டியின் போது அடிக்க 2 ஓட்டங்கள் ஓடிய டோனி மயக்கம் அடையும் நிலைக்கு சென்றார். அணி மருத்துவர் அவருக்கு சிகிச்சையும், தண்ணீரும் அளித்து தேற்றியது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்