அணிக்கு நான் எந்த நிலையில் தேவைப்படுகிறேன் என்பது தான் முக்கியம்: நீண்ட நாட்களுக்கு பின் டோனியின் பேட்டி

Report Print Kabilan in கிரிக்கெட்

14 ஆண்டுகள் ஆடிய பிறகு இந்த நிலையில்தான் களமிறங்குவேன் என்று கூற முடியாது என இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் டோனி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் டோனி 3 மாதங்களுக்கு பிறகு, அவுஸ்திரேலிய தொடர்ச்சியாக மூன்று அரைசதங்கள் அடித்து அசத்தினார். அத்துடன் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், ‘நான் 6ஆம் நிலையில் இறங்கினால், வேறொருவர் 4ஆம் நிலையில் இறங்கும்போது இருவரது நிலையையும் பரஸ்பரம் மாற்ற முடியுமா என்று பார்க்க வேண்டும்.

ஆனால், அதே வேளையில் அணியின் balance-யும் தவறக் கூடாது. நாம் எங்கு ஆட விரும்புகிறோம் என்பது முக்கியமல்ல, எத்தனை வீரர்களை அந்த இடத்தில் நிரப்ப முடியும் என்பதே விடயம்.

நான் எந்த நிலையிலும் இறங்க தயார். மீண்டும் 5 அல்லது 6ஆம் நிலையில் இறங்க வேண்டும் என்று கூறினாலும் எனக்கு மகிழ்ச்சியே. முக்கியமான விடயம் என்னவென்றால், அணிக்கு நான் எந்த நிலையில் தேவைப்படுகிறேன் என்பது தான்.

AFP

14 ஆண்டுகள் ஆடிவிட்டு நான் 6ஆம் நிலையில் இறங்க மாட்டேன் என்றோ, 4 அல்லது 5யில் தான் என் தேவை இருக்கிறது என்றோ கூற முடியாது. அணிக்கு நான் எந்த நிலையில் தேவைப்படுகிறேனோ அந்த நிலையில் இறங்க விரும்புகிறேன். அதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இது மிகவும் மந்தமான பிட்ச். ஆகவே விரும்பும்போதெல்லாம் அடிப்பது கடினம். முடிவு வரை எடுத்துச் செல்ல வேண்டும். ஏனெனில் அவர்கள் பந்துவீச்சாளர்கள் சிலருக்கு ஓவர்கள் முடிவடையும் தருணம்.

ஆகவே, இந்த பிட்சில் எந்த பந்துவீச்சாளரை நாம் அடிக்க வேண்டும் என்பதை தீர்மானித்து ஆட வேண்டும். நன்றாக வீசுபவர்களை அடிக்கப் போய் ஆட்டமிழப்பதில் எந்த ஒரு பயனும் இல்லை’ என தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers