அவுஸ்திரேலியா மண்ணில் வரலாற்று சாதனை படைத்த கோஹ்லி படை! வித்தியாசமாக வாழ்த்து சொன்ன மனைவி அனுஷ்கா

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியா அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றிய இந்திய அணிக்கு கோஹ்லியின் மனைவி தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது கனவு மட்டுமில்லை, அது ஒரு சரித்திரம் என்று கூட கூறலாம்.

இந்திய அணியில் மிகப் பெரிய ஜாம்பவான்கள் இருந்த போதும், சாதிக்க முடியாத காரியத்தை, கோஹ்லி தலைமையிலான அணி சாதரணமாக செய்து காட்டியுள்ளது.

அவுஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் டி20 தொடரை டிரா செய்தாலும் மிக முக்கியமான டெஸ்ட் தொடரையும், ஒருநாள் தொடரையும் வென்று சாதித்து காட்டியது.

டோனி தலைமையில் 2008-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த முத்தரப்பு ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றி இருந்தாலும், இந்தியா, அவுஸ்திரேலியா அணிகள் மட்டும் மோதும் ஒருநாள் தொடரை வென்றிருப்பது இதுவே முதன் முறையாகும்.

எத்தனையோ கேப்டன்களால் முடியாத சாதனையை விராட் கோஹ்லி இப்போது படைத்துள்ளார்.

இப்படி வரலாற்று சாதனை படைத்த கோஹ்லியை பலரும் பாராட்டி வரும் நிலையில், அவரது மனைவி அனுஷ்கா வித்யாசமாக கோஹ்லியை பாராட்டியுள்ளார்.

அதில், என்ன ஒரு மறக்க முடியாத, அற்புதமான சுற்றுப்பயணம் இது!. இந்த வரலாற்று வெற்றியை நேரில் இருந்து ரசித்ததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். பெரும் வாழ்த்துகள். எனது காதலை அதாவது கோஹ்லியை நினைத்து நான் பெருமை கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்