இலங்கை வீரர்கள் இருவர் அதிரடி சதம்: எதிரணியை பந்தாடி அபார வெற்றி

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை ஏ மற்றும் அயர்லாந்து ஏ அணிகள் மோதிய ஒருநாள் போட்டியில் இலங்கை ஏ அணி வெற்றி பெற்றது.

இலங்கையின் Hambantota நகரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இலங்கை ஏ மற்றும் அயர்லாந்து ஏ அணிகள் மோதின.

இதில் இலங்கை ஏ அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் அவிஸ்கா பெர்ணாண்டோ மற்றும் மிலிண்டா சிரிவர்டினா ஆகிய இருவரும் அபாரமாக விளையாடி சதமடித்தனர்.

பெர்ணாண்டோ 128 ஓட்டங்களும், மிலிண்டா 111 ஓட்டங்களும் குவித்தனர். உபுல் தரங்கா 66 ஓட்டங்கள் எடுத்தார்.

இதையடுத்து இலங்கை ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 365 ஓட்டங்கள் குவித்தது.

இதன்பின்னர் 366 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இமாலய இலக்கை நோக்கி அயர்லாந்து ஏ அணி களமிறங்கியது.

அந்த அணியின் வீரர் டக்கர் 109 ஓட்டங்கள் மற்றும் ஷனோன் 67 ஓட்டங்கள் எடுத்தனர்.

இருந்தபோதிலும் அந்த அணியின் மற்ற வீரர்கள் நிலைத்து நின்று விளையாட தவறியதால் 48.2 ஓவர்களில் 305 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம் இலங்கை ஏ அணி 60 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers