முன்னாள் கிரிக்கெட் வீரர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் அவதி - உதவ முன் வந்த சவுரவ் கங்குலி

Report Print Abisha in கிரிக்கெட்

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்டின் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் சிகிச்சை நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அவருக்கு உதவுவ முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி முன்வந்துள்ளார்.

இத்தியாவின் முன்னாள் கிரிகெட்வீரரான ஜேக்கப் மார்ட்டின் 138 முதல் தர போட்டிகளில் விளையாடி 9,192 ரன்கள் எடுத்துள்ளார்.

இவர் கடந்த 2009-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, 2016-17 சீசனில் பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.

46 வயதான ஜேக்கப் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு சிகிச்சைக்காக நாளொன்றுக்கு சுமார் 70,000 செலவு ஆகின்றது என்று கூறப்படுகின்றது. கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் திகதியிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார் ஜேகப். இந்நிலையில் குடும்பத்தினால் மருந்திற்கு பணம் செலுத்த இயலாமல் சிகிச்சையை நிறுத்தி விட்டதாக தகவல்கள் பரவி வந்தன.

இதனை அடுத்து பிசிசிஐ சார்பில் ரூ. 5 லட்சமும், பரோடா கிரிக்கெட் சங்கம் சார்பில் ரூ.2.70 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது

இதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாக தெரிவித்துள்ளார்.

மேலம், அவர் இது குறித்து, நானும் மார்ட்டினும் அணியில் ஒன்றாக விளையாடியுள்ளோம். அவர் அமைதியான நபர் என்றும் மார்ட்டின் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஜாகிர் கான், முனாப் பட்டேல், யூசப் பதான், இர்பான் பதான் உள்ளிட்ட வீரர்களும் உதவி செய்யவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers