செம டைவ் அடித்து கேட்ச் பிடித்த பாண்ட்யா! மிரண்டு போய் வெளியேறிய நியூசிலாந்து வீரர் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான ஹார்திக் பாண்ட்யா டைவ் அடித்து கேட்ச் பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்து ஆடிய நிலையில், இந்திய அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல் 49 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின் ஆடி வரும் இந்திய அணி சற்று முன் வரை 8.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 39 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் பெண்களைப் பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய ஹார்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

வாய்ப்பு கொடுக்கப்பட்ட முதல் போட்டியிலே அவர் அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார். சஹால் வீசிய பந்தை, எதிர் திசையில் நின்ற வில்லியம்சன் இறங்கி அடித்து ஆட, லெக் திசையில் பீல்டிங் நின்ற பாண்ட்யா அபாராமாக டைவ் அடித்து கேட்ச் பிடித்தார்.

இதைக் கண்ட வில்லியம்சன் ஒரு வித ஏமாற்றத்துடனே பெளலியன் திரும்பினார். அந்த வீடியோ தற்போது வெளியாகி, சர்சைக்கு பின் முதல் போட்டியில் செம கேட்ச் பிடித்து பாராட்டை பெற்று வருகிறார் என்று இணையவாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers