முதல் ஓவரிலே வானவேடிக்கை காட்டிய கப்டில்! அசால்ட்டாக தூக்கிய புவனேஷ்வர் குமார் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் பவுண்டரி, சிக்ஸர் என அடுத்தடுத்து விளாசிக் கொண்டிருந்த மார்டின் கப்டிலின் விக்கெட்டை புவனேஷ்வர் குமார் அசால்ட்டாக வீழ்த்தினார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று ஹேமில்டனில் நடைபெற்றது.

இதில் நியூசிலாந்து அணியின் பந்து வீச்சை தாக்குபிடிக்க முடியாமல், இந்திய அணி 30.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 92 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

அதன் பின் ஆடிய நியூசிலாந்து அணி 14.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 93 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இப்போட்டியில் நியூசிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரான மார்டின் கப்டில் புவனேஸ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலே சிக்ஸர், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி என மிரட்டிக் கொண்டிருந்தார்.

அதன் பின் புவேனேஷ்வர் குமார் நான்காவது பந்தில் சாமர்த்தியமாக லெக்திசையில் வீசி அவரின் வீக்கெட்டை வீழ்த்தினார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers