நியூசிலாந்து அணியுடன் மோசமான தோல்வி! கோஹ்லி விஷயத்தில் அதிரடி கருத்து கூறிய புவனேஷ்

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து, வேகப்பந்து வீச்சாளர் புவேனேஷ்வர் குமார், கோஹ்லி விஷயத்தில் அதிரடி கருத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடந்த நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது.

இந்திய அணியின் தோல்விக்கு கோஹ்லி மற்றும் டோனி இல்லாததே காரணம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் டோனி இல்லாத அணியின் நிலையை பாருங்கள் என்று தெரிவித்திருந்தார்.

இப்படி இந்திய அணி கோஹ்லி மற்றும் டோனியை தான் நம்பியிருக்கிறதால், மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு சரியான வீரர்கள் இன்னும் கிடைக்கவில்லையா என்ற விவாதமும் சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், நாங்கள் கடந்த சில மாதங்களாக சிறப்பாக ஆடிவருகிறோம்.

இது போன்ற போட்டிகள் அமைவது அரிதான விஷயம், இருப்பினும் இந்த போட்டி மூலம் அணியில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் குறைபாடுகள் கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கும்.

நியூசிலாந்து பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். இந்திய அணியில் நடுநிலை துடுப்பாட்ட வீரர்கள் நன்றாக ஆடியிருக்கலாம்.

ஆனால் துடுப்பெடுத்தாடுவது கடினமாக இருந்தது. அவர்களுக்கு இது நல்ல பாடமாக அமைந்திருக்கும். கோஹ்லி போன்ற ஒரு வீரர் அணியில் ஆடாதது இழப்புதான். ஆனால் அவரை மட்டுமே நம்பியிருக்க விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்