200 என்பது வெறும் எண்ணிக்கைதான் – மிதாலிராஜின் வரலாற்று சாதனை

Report Print Abisha in கிரிக்கெட்

200 ஒருநாள் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் 200 என்பதெல்லாம் வெறும் எண்ணிக்கைதான் என தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கி 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய உலகின் முதல் வீராங்கனை என்கிற சாதனையை மிதாலி ராஜ் பெற்றிருந்தார்.

இதுகுறித்து அவர் அளித்த போட்டியில் தன்னை பொறுத்தவரை 200 என்பதெல்லாம் வெறும் எண்ணிக்கைதான் என கூறியுள்ளார்.

மேலும், இந்திய அணியின் சீருடையை அணிந்து விட வேண்டும் என்ற கனவோடுதான் கிரிக்கெட்க்குவந்ததாகவும், தற்போதுதான் படைத்த சாதனையையெல்லாம் தான் படைப்பேன் என நினைத்ததே இல்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்