டோனி- ரோஹித் ஷர்மாவை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்த பாகிஸ்தான் வீராங்கனை! எதில் தெரியுமா?

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணியின் மூத்த வீராங்கனை சனா மிர், 100 டி20 போட்டிகளில் விளையாடி புதிய சாதனை படைத்துள்ளார்.

100 டி20 போட்டிகளில் விளையாடிய முதல் ஆசிய வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ள சனா மிர்(33), இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி வீரர்களான டோனி, ரோஹித் ஷர்மா ஆகியோரை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

டோனி 93 போட்டிகளிலும், ரோஹித் 90 போட்டிகளிலும் விளையாடியுள்ளனர். சனா மிர் இதுவரை இரண்டு போட்டிகளை மட்டுமே காயம் காரணமாக தவறவிட்டுள்ளார். மேலும், பாகிஸ்தான் மகளிர் அணிக்காக அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

அத்துடன் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடியையும்(99 போட்டிகள்) முந்திய சனா மிர், மற்றொரு வீரரான ஷோயிப் மாலிக்கிற்கு(110 போட்டிகள்) அடுத்த இடத்தில் இருக்கிறார்.

அதிக டி20 போட்டிகளில் விளையாடிய வீராங்கனைகள் பட்டியலில் சனா மிர் 6வது இடத்தைப் பிடித்துள்ளார். கடந்த 2005ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளிலும், 2009ஆம் ஆண்டு முதல் டி20 போட்டிகளிலும் விளையாடி வரும் சனா மிர், சுழற்பந்துவீச்சு மற்றும் பேட்டிங் இரண்டில் கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers