10 ஓட்டங்களில் ஆல் அவுட்டான கிரிக்கெட் அணி

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவில் பெண்களுக்கான நடைபெறும் டி20 தொடரில் வெறும் 10 ஓட்டங்களுக்கு தெற்கு அவுஸ்திரேலியன் அணி சுருண்டது.

பெண்களுக்கான டிவிஷன் அளவிலான டி20 கிரிக்கெட் போட்டி அவுஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடைபெற்ற போட்டியில் தெற்கு அவுஸ்திரேலியன்- நியூ சவுத் வேல்ஸ் அணிகள் மோதின.

முதலில் துடுப்பெடுத்தாடிய தெற்கு அவுஸ்திரேலியன் அணியில் அடுத்தடுத்து வீராங்கனைகள் ஆட்டமிழக்க வெறும் 10 ஓட்டங்களே எடுத்தனர், இதில் 6 ஓட்டங்கள் வைடு மூலமாக வந்தது தான்.

தொடக்க வீராங்கனை பெபி மான்செல் மட்டும் தாக்குப்பிடித்து 4 ஓட்டங்கள் எடுத்தார், ரோக்சனா 2 ஓவர்கள் வீசி ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுக்கள் கைப்பற்றினார்.

பின்னர் களமிறங்கிய நியூ சவுத் வேல்ஸ் 2.5 ஓவரில் இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers