டோனி போல் ஹெலிகாப்டர் ஷாட் அடித்து அசத்திய அவுஸ்திரேலியா வீரர்! வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக்பாஸ் லீக் போட்டியில் அவுஸ்திரேலியா வீரர் கவுட்டர் நைல் டோனி போன்று ஹெலிகாப்டர் ஷாட் அடித்து சிக்ஸர் அடித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியாவில் உள்ளூர் தொடர்பான பிக்பாஸ் லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் 54-வது போட்டியில் பெர்த் ஸ்கார்சர்ஸ்-அடிலெய்டு அணிகள் மோதின.

முதலில் ஆடிய பெர்த் ஸ்கார்சர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் எடுத்தது.

அதன் பின் ஆடிய அடிலெய்டு அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்கள் எடுத்து அசால்ட்டாக வெற்றி பெற்றது.

இந்நிலையில் இப்போட்டியில் பெர்த் ஸ்கார்சர்ஸ் அணியின் ஆல் ரவுண்டரான கவுட்டர் நைல் தான் சந்தித்த முதல் பந்திலே டோனியைப் போன்று ஹெலிகாப்டர் ஷாட் அடித்து சிக்ஸர் அடித்து அசத்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers