கோஹ்லியா? ரோஹித் ஷர்மாவா? டி20யில் சிறந்த துடுப்பாட்ட வீரர் குறித்து கூறிய ஹர்பஜன் சிங்

Report Print Kabilan in கிரிக்கெட்

டி20 கிரிக்கெட் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர் கோஹ்லியா, ரோஹித்தா என்ற பேச்சு கிளம்பியுள்ள நிலையில், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்தார். அதனைத் தொடர்ந்து, டி20யில் சிறந்த துடுப்பாட்ட வீரர் கோஹ்லியா அல்லது ரோஹித்தா என்ற விவாதம் இந்திய கிரிக்கெட் உலகில் சென்றுகொண்டிருக்கிறது.

இந்நிலையில், முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது விராட் கோஹ்லி மற்றும் ரோஹித் ஷர்மா இருவர் குறித்தும் கூறுகையில்,

‘இருவரும் மிகப் பெரும் வீரர்கள். போட்டிகளை வென்று கொடுத்தவர்கள். அவர்களது சாதனைகளே அவர்களை பற்றி பேசும். ரோஹித் ஷர்மா அதிக திறமை வாய்ந்தவர். விராட் கோஹ்லி கடுமையாக உழைக்கும் கிரிக்கெட் வீரர்.

கோஹ்லி, ரோஹித் போன்ற திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவரது கடும் உழைப்பு மற்றும் கிரிக்கெட் ஆர்வம் தான் அவரை இன்று அவர் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்துள்ளது.

PTI

இவர்கள் இருவரில் யார் சிறந்தவர் என என்னால் எளிதில் கூற முடியாது. ஆனால், இவர்கள் இருவரும் இந்தியாவிற்காக ஆடுகிறார்கள் என்பது தான் முக்கியம்’ என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ரோஹித் துவக்க வீரர் என்பதால் அவரால் விரைவில் ரன் குவிப்பில் ஈடுபட முடிகிறது.

ஆனால், கோஹ்லி பல சமயம் துவக்க வீரர்களின் விக்கெட்டுகள் விழுந்த பின் பேட்டிங் செய்ய வருகிறார். அதனால், நிதானமாக ஆடத் துவங்கி ரன் குவிப்பில் ஈடுபட துவங்கும் போது 15-16 ஓவர்கள் ஆகி விடுகிறது. அதனால் இந்த புள்ளி விவரம் எல்லாம் முக்கியமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

கோஹ்லி டி20 போட்டியில் ஒரு சதம் கூட அடிக்காத நிலையில், ரோஹித் நான்கு சதங்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers