கோப்பையை வெல்லப் போவது யார்? கண் சிமிட்டும் நேரத்திற்குள் அசுர வேக ஸ்டம்பிங் செய்த டோனி வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் டோனி மீண்டும் ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் செய்து அசத்தியுள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடயே மூன்றாவது டி20 போட்டி இன்று ஹெமில்டனில் நடைபெற்று வருகிறது.

இதில் நியூசிலாந்து அணி சற்று முன் வரை 17.2 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்கள் எடுத்து, இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்து விளையாடி வருகிறது.

இந்நிலையில் ஆட்டத்தின் 7-வது ஓவரை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் வீசினார்.

அப்போது அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த துவக்க வீரர் டிம் செய்பிரிட் பந்தை தடுத்தாட முயற்சித்த போது, பந்தானது விக்கெட் கீப்பர் டோனியிடம் சென்றது.

அப்போது பந்தை பிடித்த டோனி, ஸ்டம்பிங் செய்து, நடுவரிடம் அவுட் கேட்டு முறையிட்டார்.

இதனால் இது மூன்றாவது நடுவரிடம் சென்றது. அப்போது பார்த்த போது, கண் சிமிட்டும் நேரத்திற்குள் டோனி ஸ்டம்பிங் செய்ததது தெரிந்தது.

இதனால் 25 பந்தில் 43 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டிம் செய்பிரிட் வெளியேறினார்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலிரண்டு போட்டியின் முடிவில், இரு அணிகளும் 1-1 என்று சமநிலையில் உள்ளதால், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers