நோ பால் வீசியவர்கள் அபராதமாக பணம் செலுத்த வேண்டும் என அதிரடி: எவ்வளவு தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

விதர்பா அணி சமீபத்தில் ரஞ்சி தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இது அந்த அணியின் இரண்டாவது ரஞ்சி தொடர் வெற்றியாகும். விதர்பா அணி தொடர்ந்து இரு ஆண்டுகளாக வெற்றி பெற்றுள்ள நிலையில், அதன் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் தனி கவனம் பெற்றுள்ளார்.

அவர் பந்துவீச்சாளர்களை கட்டுப்படுத்தும் முறை ஒன்று அவர் எந்த மாதிரியான பயிற்சியாளர் என கூறும் வகையில் அமைந்துள்ளது.

அதாவது, சந்திரகாந்த் பண்டிட் பந்துவீச்சாளர்கள் நோ பால் வீசாமல் இருக்க வேண்டும் என்பதில் மிக கண்டிப்பாக இருப்பார் என கூறப்படுகிறது. அதனால், எந்த பந்துவீச்சாளர் நோ பால் வீசுகிறாரோ அவருக்கு அபராதம் விதிக்கிறார் பண்டிட்.

இது பற்றி விதர்பாவின் ரஞ்சி அணி கேப்டன் பைசல் கூறுகையில், நோ பால் வீசினால் ரூ.500, நோ பால் பந்தில் விக்கெட் விழுந்தால் ரூ.1000 என நோ பால் வீசும் பந்துவீச்சாளர்களுக்கு அபராதம் விதிப்பார் என சந்திரகாந்த் குறித்து கூறினார்.

சந்திரகாந்த்தின் அபராதம் விதிக்கும் முறை சரியாக வேலை செய்துள்ளது என்பதற்கு சான்றாக விதர்பா தொடர்ந்து இரு முறை ரஞ்சி தொடரை வென்று காட்டியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers