154 ஓட்டங்களில் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்! பந்துவீச்சில் மிரட்டிய இங்கிலாந்து

Report Print Kabilan in கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் மார்க்வுட், மொயீன் அலியின் அபார பந்துவீச்சினால் மேற்கிந்திய தீவுகள் 154 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி செயிண்ட் லூசியாவில் நடந்து வருகிறது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.

அதன்படி முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 277 ஓட்டங்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 79 ஓட்டங்களும், ஜோ பட்லர் 67 ஓட்டங்களும் எடுத்தனர்.

AFP
AP

மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் கேமர் ரோச் 4 விக்கெட்டுகளையும், கேப்ரியல், அல்ஸாரி மற்றும் கீமோ பவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதனைத் தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள் அணி களமிறங்கியது.

இங்கிலாந்தின் மொயீன் அலி, மார்க்வுட் இருவரும் மேற்கிந்திய தீவுகளின் விக்கெட்டுகளை மாறி மாறி கைப்பற்றினர். இதனால் அந்த அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன.

தொடக்க வீரர் கேம்பெல் 41 ஓட்டங்களும், டவ்ரிச் 38 ஓட்டங்களும் எடுத்த நிலையில் மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆகினர். இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணி 47.2 ஓவரில் 154 ஓட்டங்களுக்கு சுருண்டது.

அபாரமாக பந்து வீசிய மார்க்வுட் 5 விக்கெட்டுகளும், மொயீன் அலி 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். அதன் பின்னர் 123 ஓட்டங்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.

2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்கள் எடுத்திருந்தது. பர்ன்ஸ் 10 ஓட்டங்களுடனும், ஜென்னிங்ஸ் 8 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

Getty

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers