நல்லா விளையாடினாலும் அந்த தமிழக வீரருக்கு உலககோப்பையில் இடமிருக்காது! கங்குலியின் பேட்டியால் ரசிகர்கள் அதிர்ச்சி

Report Print Santhan in கிரிக்கெட்

நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 தொடரில் விஜய் சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தாலும், அவர் உலகக்கோப்பை அணியில் இடம் பிடிப்பார் என்று நான் கருதவில்லை என கங்குலி தெரிவித்திருப்பது தமிழக ரசிகர்களுக்கு வருத்ததை கொடுத்துள்ளது.

நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, அங்கு ஒருநாள் தொடரைக் கைப்பற்றினாலும், டி20 தொடரில் கோட்டை விட்டது.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த விஜய்சங்கருக்கு முதலில் ஒருநாள் தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அந்த தொடரில் விஜய்சங்கர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், அவர் டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து டி20 தொடரில் மூன்றாவது வீரராக களமிறக்கப்பட்ட விஜய் சங்கர் அதில் பெரிதாக சோபிக்கவில்லை.


அதன் பின் இரண்டாவது போட்டியில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்படவில்லை. ஆனால் கடைசி போட்டியில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 213 ஒட்டங்களை இந்திய அணி விரட்டிய போது இந்திய அணியின் தொடக்க வீரர் தவான், தொடக்கத்திலேயே விக்கெட்டை பறிகொடுக்க, இக்கட்டான மற்றும் அடித்து ஆட வேண்டிய சூழலில் மூன்றாம் வரிசையில் களமிறக்கப்பட்டார் விஜய் சங்கர்.

தன் மீது அணி நிர்வாகம் வைத்த நம்பிக்கையை கெடுக்காமல், ரோஹித்துடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அடித்து ஆடினார் .

இதனால் 28 பந்துகளில் 43 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். இப்போட்டியில் ரோஹித் - விஜய் சங்கர் பார்ட்னர்ஷிப் முக்கியமானதாக அமைந்தது.

பேட்டிங்கில் மட்டுமின்றி பீல்டிங்கிலும் விஜய் சங்கர் பட்டையை கிளப்பி வருகிறார். குறிப்பாக இரண்டாவது டி20 போட்டியில் டெய்லரை பவுலிங் லயனிலிருந்து ரன் அவுட் செய்தார்.

இப்படி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அவர் வரவுள்ள உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கங்குலி கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், விஜய் சங்கரின் துடுப்பாட்டம் முன்பை விட இப்போது மேம்பட்டிருக்கிறது. ரிஷப் பண்ட்டும் நன்றாக ஆடினார். ஆனால் விஜய் சங்கர் உலக கோப்பைக்கு அழைத்து செல்லப்படுவார் என்று நான் கருதவில்லை என தெரிவித்துள்ளார்.

கங்குலி இப்படி கூறுவதற்கு முக்கிய காரணம், உலக கோப்பைக்கான ஆல்ரவுண்டர் களத்தில் ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, கேதர் ஜாதவ் ஆகியோர் உள்ளதால் விஜய் சங்கருக்கான அவசியம் இருக்காது என்று கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers