டி20 கிரிக்கெட் தரவரிசை பட்டியல்: முன்னேறிய ரோகித் சர்மா.. இலங்கை வீரர்கள் நிலை என்ன?

Report Print Raju Raju in கிரிக்கெட்

டி20 கிரிக்கெட்டுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் பாபர் அசாம் முதலிடத்தில் நீடிக்கிறார்.

நியூசிலாந்து அணியின் கோலின் முன்ரோ இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ள நிலையில், அவுஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இந்திய அணி வீரர்களை பொறுத்தவரையில் ரோகித் சர்மா பத்தாவது இடத்திலிருந்து மூன்று இடங்கள் முன்னேறி 7வது இடத்துக்கு வந்துள்ளார்.

அதே சமயம் லோகேஷ் ராகுல் பத்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இலங்கை வீரர்களை பொறுத்தவரையில், குசல் பெரேரா 22வது இடத்திலும், திசேரா பெரேரா 30வது இடத்திலும் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers