தென் ஆப்பிரிக்காவை பந்துவீச்சால் திணறடிக்கும் இலங்கை... அபாரமாக கேட்ச் பிடித்த மெண்டீஸ்... எழுந்த சர்ச்சை

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தற்போதைய நிலவரப்படி தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவின் டர்பனில் தொடங்கிய போட்டியில் அந்த அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

அந்த அணியின் தொடக்க வீரர் எய்டின் மர்க்ரம் 11 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில் மற்றொரு தொடக்க வீரர் டீன் எல்கர் டக் அவுட் ஆனார்.

பின்னர் வந்த நட்சத்திர வீரர் ஹசீம் ஆம்லா 3 ரன்களில் அவுட்டனார்.

தற்போது வரை அந்த அணி 38 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

இலங்கை அணி சார்பில் விஷ்வா பெர்ணாண்டோ மற்றும் கசுன் ரஜிதா ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், சுரங்கா லக்மல் 1 விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

இதனிடையில் ஆட்டம் தொடங்கிய முதல் 2 மணி நேரத்திலேயே சர்ச்சைகள் கிளம்பியது.

ஆம்லா எல்.பி. நாட் அவுட் தீர்ப்பின் மீதான டி.ஆர்.எஸ் முறையீட்டுக்கு 15 விநாடிகள் முடிந்து விட்டது என்று நடுவர் மறுத்தது சர்ச்சையானது,

அதன் பிறகு இதே ஆம்லாவுக்கு ஸ்லிப்பில் பிடித்த அபாரமான கேட்சுக்கு சாஃப்ட் சிக்னலாக களநடுவர் நாட் அவுட் என்று கூறியது சர்ச்சையை கிளப்பியது.

எல்.பி. அப்பீலில் தப்பிய ஆம்லா நீண்ட நேரம் நீடிக்கவில்லை. 3 ரன்கள் எடுத்த நிலையில் சுரங்க லக்மல் பந்தை ஆடலாமா வேண்டாமா என்ற இரண்டு மனநிலையில் சற்றே தாமதமான முடிவினால் எட்ஜ் ஆகி குசல் மெண்டிஸ் அருமையாக அதை கேட்ச் எடுத்தார்.

ஆனால் இம்முறை பந்து தரையில் பட்டு வந்தது என்ற சந்தேகம் எழுந்தது, ஆம்லாவும் களத்தை விட்டு அசையவில்லை.

கேட்ச் துல்லியமானதுதான் என்று தெரிந்தது, ஆனால் களநடுவர் ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ 3வது நடுவரை அழைத்தார், ஆனால் தனக்குத் தெரியவில்லை என்று சைகை செய்வதற்குப் பதிலாக சாஃப்ட் சிக்னலாக நாட் அவுட் என்றார். ஆனால் ரீப்ளேயில் பந்து துல்லியமாக கேட்ச் ஆனது தெரிய 3வது நடுவர் கோல்ட் அவுட் என்று தீர்ப்பளித்தார்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers