அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஆரோன் பின்ச் தலைமையிலான அவுஸ்திரேலிய அணியானது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டி-20 மற்றும் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான முதல் 20 ஓவர் போட்டியானது வரும் 14-ம் திகதி விசாகப்பட்டினத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் போட்டியில் விளையாட உள்ள இந்திய அணி வீரர்களுக்கான பட்டியலை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

20 ஓவர் போட்டிகளுக்கான வீரர்கள்:

விராட் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா, கே.எல். ராகுல், ஷிகர் தவான், ரிஷாப் பந்த், தினேஷ் கார்த்திக், எம்.எஸ். தோனி, ஹார்டிக் பாண்டியா, குர்னால் பாண்டியா, விஜய் ஷங்கர், யூவேந்திர சாஹால், ஜாஸ் ப்ரிட் பம்ரா , உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல், மாயன்க் மார்கண்டே.

முதல் இரண்டு ஒரு நாள் போட்டிகளுக்கான வீரர்கள்:

விராட் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகார் தவான், அம்பதி ராயடு, கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி, ஹார்டிக் பாண்டியா, ஜாஸ்ரிட் பம்ரா, முகம்மது ஷமி, யூவேந்திர சாஹால், குல்தீப் யாதவ், விஜய் ஷங்கர், ரிஷாப் பன்ட், சித்தார்த் கவுல், கே.எல். ராகுல்.

இறுதி மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான வீரர்கள்:

விராட் கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகார் தவான், அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், எம்.எஸ். தோனி, ஹார்டிக் பாண்டியா, ஜாஸ்ரிட் பம்ரா, புவனேஸ்வர் குமார், யூவேந்திர சாஹால், குல்தீப் யாதவ், முகமது ஷமி. , விஜய் ஷங்கர், கே.எல். ராகுல், ரிஷாப் பந்த்

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்