259 ரன்களுக்கு சுருண்ட தென் ஆப்பிரிக்கா! 5 விக்கெட்களை வீழ்த்தி இலங்கை பந்துவீச்சாளர் அசத்தல்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 304 ரன்களை இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

டர்பனில் கடந்த 13-ஆம் திகதி தொடங்கிய டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

பதிலுக்கு இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையடுத்து 44 ரன்கள் முன்னிலையுடன் தென் ஆப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.

நேற்றைய போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம நேர முடிவில் தென்னாபிரிக்க அணி 124 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்திருந்தது.

இந்நிலையில் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 259 ரன்களில் ஆட்டமிழந்தது.

இதன் மூலம் இலங்கை அணியின் வெற்றிக்கு 304 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் சார்பில் பந்து வீச்சில் லஷித் எம்புலுதெனிய 5 விக்கெட்டுக்களையும், விஷ்வ பெர்ணான்டோ 4 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித ஒரு விக்கெட்டுனையும் வீழ்த்தினார்கள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்