தினேஷ் கார்த்திக் நீக்கம் ஏன்? ரசிகர்கள் கடும் விமர்சனம்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
இந்திய அணியின் ஒருநாள் அணியிலிருந்து தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டதற்கு ரசிகர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலியா அணி இரண்டு டி20 போட்டிகளிலும், ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்கிறது.

இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரிஷப் பண்ட் டி20 மற்றும் ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார், அத்துடன் தொடர்ந்து சொதப்பி வரும் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லகக் கிண்ண அணியில் தினேஷ் கார்த்திக்கு இடம் கிடைப்பது சந்தேகம் தான் என கூறப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளாக நன்றாக விளையாடியவரை அணியிலிருந்து நீக்கியது ஏன் என கேள்விகள் எழுந்துள்ளது.

மேலும் இதை சின்னப்பிள்ளைத்தனமான அரசியல் எனவும் சாடி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers