அணிக்கு திரும்பிய முன்னணி வீரர்கள்: ஒருநாள் தொடருக்கான பலம் வாய்ந்த இலங்கை அணி அறிவிப்பு

Report Print Raju Raju in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது இரு அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் குசல் பெரேராவின் அதிரடி ஆட்டத்தால் இலங்கை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

2-வது டெஸ்ட் போர்ட் எலிசபெத்தில் வருகிற 21-ம் திகதி நடக்கிறது. அதன்பின் மார்ச் 3-ம் திகதி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கிறது.

இந்த தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் லசித் மலிங்கா அணித்தலைவராக தொடரவுள்ளார்.

அணியில் மீண்டும் உடானா மற்றும் தனஞ்செயா சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை அணி விபரம் வருமாறு,

மலிங்கா, பெர்னாண்டோ, தரங்கா, டிக்வெல்லா, குசால் பெரேரா, குசால் மெண்டிஸ், டி சில்வா, திசாரா பெரேரா, தனஞ்செயா, ஏ. பெரேரா, ஓ பெர்னாண்டோ, கே. மெண்டிஸ், உடானா, வி. பெர்னாண்டோ ,கே. ரஜிதா, சண்டகன்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers