பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட மாட்டோம்! ஐபிஎல் தலைவர் தகவல்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய அரசு அனுமதி அளிக்காத வரை நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எந்தவொரு நேரடி போட்டி தொடரிலும் விளையாட மாட்டோம் என ஐ.பி.எல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான போட்டிகளை தவிர்க்க வேண்டும் என்ற கருத்து நிலவி வருகிறது.

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கு ஸ்பான்சர் கொடுக்க முடியாது என ரிலையன்ஸ் அறிவித்தது. இந்நிலையில், ஐ.பி.எல் தலைவர் ராஜீவ் சுக்லா பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் விளையாட மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘எங்களது நிலைப்பாடு மிகவும் தெளிவானதாகும். மத்திய அரசு அனுமதி அளிக்காத வரை, நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் எந்தவொரு நேரடி போட்டி தொடரிலும் விளையாட மாட்டோம்.

எல்லாவற்றையும் விட விளையாட்டு மேலானது தான். அதே நேரத்தில் யாரோ சிலர் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளித்தால் அது நிச்சயம் விளையாட்டையும் கூட பாதிக்க தான் செய்யும்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணி விளையாடுமா என்பது குறித்து தற்போது எங்களால் எதுவும் கூற முடியாது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கிறது. என்ன நடக்கிறது என்பதை நாங்கள் பொறுத்து இருந்து பார்ப்போம்.

பாகிஸ்தானின் செயல்பாட்டால் ஏற்பட்டுள்ள கோபத்தால் மக்கள் தங்கள் கருத்தை இதுபோன்ற பிரதிபலிக்கிறார்கள். பாகிஸ்தான் தங்களது செயல்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்கள் தீவிரவாதத்திற்கு ஆதரவு அளிக்கக் கூடாது.

இதனை தான் நாம் தொடக்கம் முதலே சொல்லி வருகிறோம். தீவிரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு உள்ள தொடர்பு குறித்து நமது அரசு நூற்றுக்கணக்கான ஆதாரங்களை அளித்து இருக்கிறது. அதனை அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers